பகவான் ஸ்ரீ ரமண மகஷிகளின் வாழ்வு மற்றும் உபதேசங்களை உலகெங்கும் பரப்புவதே ஸ்ரீ ரமணாச்ரமத்தின் தலையாய பணியாகும். கடந்த சில வருடங்களில் அன்பர்கள் பலர் தத்தம் நகரங்களில் ரமண மையங்களைத் தொடங்கி பகவானது உபதேசத்தைப் பரப்பும் தொண்டாற்றி வருகின்றனர். பகவான் மீது ஆழ்ந்த பக்தி கொண்ட அன்பர்கள் இம்மையங்களைத் தொடங்கி, சத்சங்கங்கள் நடத்துவது, பகவானது ஜயந்தி, ஆராதனை மற்றும் அருணை விஜய விழா போன்ற விழாக்களையும் கொண்டாடி வருகின்றனர். இம்மையங்கள் ஆசியாவில் மட்டுமன்றி, கனடா, அமெரிக்கா, ருஷ்யா, ஆஸ்திரே-யா மற்றும் ஐரோப்பாவிலும் பரவியுள்ளன.
இந்தியாவில் அமைந்துள்ள ரமண மையங்களைக் கீழே கொடுத்துள்ளோம்.
ஸ்ரீ ரமணாச்ரமம், திருவண்ணாமலை, தமிழ்நாடு +91-4175-237200
ஸ்ரீ சுந்தர மந்திரம், திருச்சுழி, தமிழ்நாடு +91-4566-282217
ஸ்ரீ ரமண மந்திரம், மதுரை, தமிழ்நாடு +91-452-2346102
ஸ்ரீ ரமண மந்திரம், தேசூர், தமிழ்நாடு
ஸ்ரீ ரமண கேந்திரம், மைலாப்பூர், சென்னை +91-44-24611397
ஸ்ரீ ரமண கேந்திரம், ஹைதராபாத், ஆந்திரப்பிரதேசம் +91-40-27424092
ஸ்ரீ ரமண கேந்திரம், புதுதில்லி +91-11-24626997
ரமண மகரிஷி சென்டர் ஃபார் லர்னிங், பெங்களூரு, கர்நாடகா +91-80-23360799
தங்கள் இல்லங்களில் ரமண சத்சங்களை நடத்த விரும்பும் அன்பர்கள் கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.